கவிதை

ஓணம் – திருவோணம் அடடா, அற்புத கானம்!

200views
தென்னங் கள்ளு குடிச்சி
தெம்மாங்கு படிச்சி
ஆடிப் பாடும் தேசமல்லோ! – கேரள தேசம்
சொர்கத்தின் வாசலல்லோ.
தையரதய்யா … ஓ … தையரதய்யா
தென்னை உண்டு; வாழை உண்டு
விண்ணைத் தொடும் பனைகளுண்டு!
உழைத்திடும் வர்க்கமல்லோ! – கேரள பூமி
உல்லாச சொர்க்கமல்லோ.
தையரதய்யா … ஓ … தையரதய்யா
தேக்கும் உண்டு; பாக்கும் உண்டு
மாதர் எழில் கூட்டும் முண்டு
கற்றோர் மிக்க நாடு அல்லோ! கேரள பூமி
கதகளிக்கு ஊற்று அல்லோ.
தையரதய்யா … ஓ … தையரதய்யா
ஏலம் மிளகு கிராம்புகளோடு,
கயிறும் ரப்பரும் வாரி வழங்கும்
செழிப்பு மிக்க தேசமல்லோ! –
கேரள பூமி
ஓணம் காணும் நாடு அல்லோ!
தையரதய்யா … ஓ … தையரதய்யா
மயி்ல் நிகர்த்த மகளிர் உண்டு
வேழம் போன்ற ஆடவருண்டு
குருவாயூர் திருத்தலத்தால் – கேரள பூமி
மேலோங்கி நிற்கு தல்லோ!
தையரதய்யா … ஓ … தையரதய்யா
கவிஞர். சேலம் சங்கர். எம்.ஏ.,

4 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!