கவிதை

தொட முடியாத ஈரானின் நாகரிகங்கள்…

106views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
சிந்து சமவெளி
நாகரிகங்களுக்கும்
முந்து வெளி நாகரிகங்கள்
இந்தப் பாரசீகங்கள்…
அமெரிக்கா பார்த்தறியாத
பழைய சிங்கங்கள்…
வேதத்தடங்களின்
விழுமியங்களில்
முகம் காட்டி வெளிப்படும்
முக்கியக் களங்கள்…
ரோமம் கிரேக்கம்
சீனம் பாரசிகம் என்று
எட்டாயிரம் ஆண்டுகள் முந்திய…
நீங்கள் ஏணி வைத்தாலும்
எட்ட முடியாத
நாம கரணங்களின்
நாகரிக வரிசை…
இரும்பின் காலங்களை
இருப்பாக்கிக் கொண்ட
இணையற்ற பேரரசு…
ஜொராஸ்திர
மூதாதையர் கடந்து
எகிப்தியப் பிரமிடுகளையும்
சீனப்பட்டுகளையும்
ரோமச் செருக்குகளையும்
தாண்டிய உயரம்…
நேற்றையக் காளான்களின்
காமாலைக் கண்களின்
உறுத்தும் பார்வைகளால்
காண முடியாத சிகரம்…
ஈரானியப் பேரரசு
பழமைகளின்
வேர் பிடித்தும்
புதுமைகளின்
பூ மலர்த்தும் புதுமைகள்…
நீங்கள் வானில்
விமானம் ஓட்டுவீர்கள்…
அவர்கள் அதை
மலைகள் குடைந்து
ஓட்டிக்காட்டுவார்கள்..
பூமிக்குள்ளிருந்தே புறப்படும்
நவீன ஏவுகணைகள் போல
அவர்கள் மலைகளின்
ஆழங்களுக்குள்ளும்
ஆய்வுகளின் ஆழங்கள்…
எச்சில் நாய்களின்
வெற்று வார்த்தைகளால்
எச்சில் படுத்த முடியாத
பிரம்மாண்டங்கள்…
கைபர் போலன் கணவாய் களுக்கு
புலப்படாத…
கஸ்ஸானிய படையெடுப்புகளும்
தாண்டிய விஸ்வரூப வெளிச்சங்கள்…
இருட்டு புத்திகளுக்கும்
எப்ஸ்டீன் கோப்புகளுக்கும்
தெரியாத
இறையாண்மை தத்துவங்கள்…
இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
அதன் வரலாற்றை
உற்று உற்றுப்படித்தாலும்
இஸ்ரேல் அமெரிக்காவால்
காண முடியாது
அதன் அடிமுடியாழம்…
கவனம்…சட்டாம் பிள்ளைகளே..
ஏழடி வளர்ந்து இருந்தாலும்
நீங்கள் அவர்கள் முன்
சாண் உயரம்தான்…
அவர்கள்தாம்
உண்மையிலேயே பூர்வீகத்தின்
ஆண் உயரம்…
ஏனெனில் ஈரானியர்கள்
உங்கள் கிறித்துவத்துக்கும்
மூத்தவர்கள்…இன்று
இஸ்லாத்தால் பூத்தவர்கள்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!