இலக்கியம்கவிதை

தேடுதல்!

115views
தேடுதல் வேண்டும்
எதைத் தேடுகிறோம்…? எதைத் தேட வேண்டும் ??
கர்ப்பப்பையில் இருக்கும் போது அந்த இருட்டில் இருந்து வெளிச்சத்தில் வர பாதையை தேடுகின்றோம்!
பிறந்தாயிற்று! வெளிச்சத்தை பார்த்தாயிற்று! !
தொப்புள் கொடியில் இருந்து பிரிந்தவுடன் பசி என்று நினைவுக்கு வரும்பொழுது தாயின் முந்தானையை தேடுகின்றோம்!
அம்மாவின் குரலோ வயிற்றில் இருக்கும் பொழுதே கேட்டாயிற்று.
அம்மா சொல்லிக் கொடுத்து அப்பா என்று தெரிந்த பின் அப்பாவின் குரல் எங்கெங்கெல்லாம்ஒலிக்கிறதோ …அந்த திசையெல்லாம் தேடுகின்றோம்.. அப்பாவை !
பள்ளிக்கூடம் செல்லும் வயது!
ராமரோ காட்டுக்குச் சென்று வனவாசமாக இருந்தது 14 வருடங்கள்!
நாம் 14 வருடங்கள் பள்ளியின் வாசம்!
எதை தேடினோம்?
நல்ல மதிப்பெண்கள்!
நல்ல பள்ளி,
நல்ல ஆசிரியர்கள்!
நல்ல கல்லூரி,
நல்ல வேலை,
நல்ல சம்பளம் ..
இது எல்லாமே தான் தேடுகின்றோம்!
மனித நேயம்?
மறந்து விட்டோமா?
நல்ல சம்பளம்,
நல்ல வேலை,
நல்ல குடும்பம் தேடிய நமக்கு..
நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற நம்முடைய அடிப்படையான கலாச்சாரத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டோம் அல்லவா? ?
சற்று நிற்போம்!
திரும்பிப் பார்ப்போம்! நம்முடைய சனாதன தர்மத்தை எவ்வளவு தூரத்தில் வைத்து இருக்கிறோம் என்பதை தேடுவோம்!
வாழ்க தமிழர் !
வளர்க சன்னாதனர் !
செழித்தோங்குக சனாதன தர்மம்! !
சுஜாதா வேணுகோபாலன்,
சென்னை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!