தமிழகம்

உசிலம்பட்டி கண்மாய் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்ப்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறியது.

259views
வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும் போது நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் 58 கிராம கால்வாய்த்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.இக்கால்வாயில் கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு உசிலம்பட்டி கண்மாய் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நீர்வரத்து அதிகமானதால் உசிலம்பட்டி கண்மாயிலிருந்து செல்லும் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்ப்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறியது.இதனால் சீமானுத்து ஓடைப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு சீமானுத்து கிராமம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.மேலும்; வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்ப்பட்டதால் வகுரணி போத்தம்பட்டி போன்ற கிராம கண்மாய்களுக்குச் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.இந்த உடைப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!