தமிழகம்

இராமநாதபுரத்தில் காமராஜ் பவுண்டேஷன் இந்தியாவின் செயல் வீரர்கள் கூட்டம்

122views
காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாடு வருகின்ற 17-18 டிசம்பர் 2022-ல் நடைபெற உள்ளது.
அம்மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்புற செய்வதற்காக இராமநாதபுரம் மாவட்ட காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் கூட்டம் இராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற்றது.
அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகளையும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களையும் விழாவிற்கு விருந்தினர்களாக அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் விழாவை வெகு சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்தி மக்களை பெருமளவில் பங்கேற்க செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். சம்சூல் கபீர், மாவட்ட செயலாளர் திரு. கே குகன், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுந்தரம், இணைச் செயலாளர் ஏ.அப்துல் பாசித் மற்றும் துரை, மருதுபாண்டி, கார்த்திகேயன், முருகேசன், சரவணலிங்கம், செல்வ விநாயகம் உள்ளிட்ட இராமநாதபுரம் மாவட்ட செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!