தமிழகம்

ஆலங்குளம் வட்டார வள மையம் சார்பில் கலைத் திருவிழா

214views
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டார வளமையம் சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது. ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.
மாறாந்தை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை மேரி பெட்டிசிரோன்மணி வரவேற்றார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்துப் பேசினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜீவா, ஆசிரியர் பயிற்றுநர் பவித்ரா, வைதேகி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவில் வட்டார வளமைய பயிற்றுநர் ராஜா நன்றி கூறினார். இரண்டாம் நாளான வியாழக்கிழமை குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அப்போது, போட்டிகளை பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், தொழிலதிபர் ஏ.மோகன்லால், பேரூராட்சிப் பணியாளர்கள் செல்வின், முருகன் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தோல்கருவி, கம்பி கருவி, பறை, டிரம்ஸ், சென்டா மேளம், கீ போர்டு, பேன்ட் வாத்தியம் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம், குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.
போட்டிகள் அனைத்தும் 3ஆம் நாளான வெள்ளிக் கிழமை நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!