தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்

183views
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ராமநாதபுரம் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு இன்று (டிச.7), 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு நாளை (டிச.8), பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கு டிச.9 ல் மாவட்ட அளவில் நடைபெறுகிறது.

6,7, 8 மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி தொடக்க விழா ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அருண், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகம்மாள், ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) பாலாஜி, உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவித் திட்ட அலுவலர் கர்ணன், நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராஜமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ரவி நன்றி கூறினார்.

6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை, ஈசை, கருவி இசை, நடனம், நாடகம் மற்றும் மொழித்திறன் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இன்றைய போட்டிகளில் 1,618 மாணவர்கள் பங்கேற்றனர்.
இக்கலை திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, தகவல் சாதன ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், சரவணன், பாலமுருகன், தினசேகர், முருகேஸ்வரி, இளையராஜா, சுமதி, நாகராஜ், ஆசிரியை நிர்மலாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!