தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே கலைஞர் சேவை மையம் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

87views
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், காணும் பொங்கலை முன்னிட்டு , கலைஞர் சேவை மையம் சார்பில் ‘மாநகராட்சி துப்புரவு பணியா|ளர்கள், ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  இந்நிகழ்வில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கப்பட்டன.
இவ்விழா கலைஞர் சேவை மையத்தின் நிறுவனர். S.Vee. வெங்கடேஷ் தலைமையிலும், கலைஞர் சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் . M. P. லெட்சுமணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்வில் திமுக மகளிரணி மாவட்ட தலைவர் சிவனம்மாள் திமுக வட்ட செயலாளர் . சாமுவேல் , நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாயன், அழகர்சாமி, கழக நிர்வாகிகள், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!