தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்க சிறப்பு இலச்சினை வெளியீடு

203views
நெல்லையில் கலைஞர் தமிழ்-100 பன்னாட்டு கருத்தரங்கத்தின் சிறப்பு இலச்சினை வெளியிடப்பட்டது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக வரும் ஜூன் மாதம் நெல்லையில் நடைபெறும் கலைஞர் தமிழ்-100 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பு இலச்சினையின் அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது தமிழ்ப் படைப்புகளை மையப்படுத்தி “கலைஞர் தமிழ்-100” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடத்த உள்ளது. நிகழ்ச்சியில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை வெளியிடப்பட உள்ளது. இதற்காக கலைஞரின் ஆட்சித் தமிழ், கலைஞரின் இலக்கியத் தமிழ், கலைஞரின் நிர்வாகத் தமிழ், கலைஞரின் இதழியல் தமிழ், கலைஞரின் மேடைத் தமிழ், கலைஞரின் திரைத் தமிழ், கலைஞரின் அரசியல் தமிழ் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும், கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன. வரும் ஜூன் மாதம் 3-ஆம் நாளன்று நெல்லையில் நடக்கவுள்ள இந்த கருத்தரங்கிற்காக தனியாக இலச்சினை (லோகோ) ஒன்று தயார் செய்யப்பட்டது. இந்த இலச்சினையின் அறிமுக நிகழ்ச்சி பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே. இராஜேந்திரன் தலைமையில் நெல்லையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழியக்கம் அமைப்பின் பொதுச் செயலாளர் வாணியம்பாடி பேராசிரியர் அப்துல் காதர், பேராசிரியர் வணங்காமுடி ஆகிய இருவரும் இணைந்து இலச்சினையை அறிமுகம் செய்தனர். முன்னதாக பொதிகைத் தமிழ்ச் சங்க பொதுக் குழு உறுப்பினர் பாளை. இராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். நெல்லையைச் சேர்ந்த கணேசன் நன்றி கூறினார். பன்னாட்டுக் கருத்தரங்க கவியரங்க நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகள் அனைத்தையும் நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கருத்தரங்க அமைப்பாளருமான கவிஞர் பே. ராஜேந்திரன் செய்து வருகிறார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!