தமிழகம்

இலங்கைக்கு கடத்தி சென்ற ரூ.1.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்: நடுக்கடலில் 4 பேர் சிக்கினர்

97views
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் சென்ற ரூ.1.30 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் கடல் வழியாக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் தங்கம், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, உள்ளிட்ட போதை பொருட்கள் சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. சட்ட விரோத நடவடிக்கையை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல் படை, இலங்கை கடற்படையினர் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி செல்ல இருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.  இதன்படி, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பலில் கடலோர காவல் படை வீரர்கள், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கூட்டு ரோந்து சென்றனர்.
தனுஷ்கோடி ராமேஸ்வரம் இடையே கடலில் சென்ற நாட்டுப்படகை நிறுத்தி சோதனை செய்தனர். அந்தப் படகில் 300 கிலோ கஞ்சா மற்றும் 500 கிலோ கிராம் கஞ்சா ஆயில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து நாட்டுப்படகில் இருந்த 4 பேரை கைது செய்து, பறிமுதல் செய்த கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகை மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த கஞ்சா, கஞ்சா ஆயிில் மதிப்பு ரூூ 1.30 கோடி என இந்திய கடலோர காவல் படை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!