தமிழகம்

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசியை வருவாய் மற்றும் காவல்துறையினர் பறிமுதல்.

270views
நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசியை வருவாய் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இருவரை கைது செய்துள்ள நிலையில் மேலும் 4 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை. கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியம் பறிமுதல் செய்யப்பட்டுளள்து.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசியை நாள்தோறும் கடத்தபட்டு பெரியகுளம் பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் பதுக்கி வைக்கபட்டும், பின்பு ரேசன் அரிசியினை பட்டை தீட்டுவதற்காகவே செயல்பட்டு வரும் ரைஸ்மில்களில் அவை குருனையாகவும், மாவாகவும் அரைக்கபடுவதும், அவ்வாறு அரைக்கபடும் ரேசன் அரிசி மீண்டும் தனித்தனி வீடுகளில் பதுக்கி வைத்து பின்பு டன் கணக்கில் சேர்ந்ததும், அவைகளை லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்வதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பெரியகுளம் வட்டாட்சியர் காஷா ஷெரிப் பிற்கு அரிசி கடத்தல் தொடர்பாக ரகசிய புகார் வந்தது. இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்ற போது லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மூடை மூடையாக ரேசன் அரிசி லாரிகளில் ஏற்றபடுவதை கண்டு கையும் களவுமாக பிடித்தார்.
எனவே பெரியகுளம் பகுதிகளில் ரேசன் கடைகளில் இருந்து கடத்தபட்டு அவை வீடுகளில் பதுக்கி வைக்கபட்டு அவை பட்டை தீட்டபட்டு அதனை எல்லாம் லாரியில் ஏற்றி விட்டு கடைசியாக லட்சுமணன் வீட்டிற்கு வந்து லாரியில் ரேசன் அரிசியை ஏற்றும் போது இவை பிடிபட்டது. முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.
மிகப்பெரிய அளவிற்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் நடத்துள்ளதை அடுத்து சம்பவ இடத்திற்கு பெரியகுளம் காவல்துறை துனை கண்கானிப்பாளர் கிதா சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தினார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அரிசி மாபியா கும்பலை சேர்ந்த லட்சுமனன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியின் ஒட்டுநர் சத்யநாராயனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியும் பறிமுதல் செய்யபட்டது.
மேலும் ரேசன் அரிசி மாபியா கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷன் அரிசி ஏற்றிய லாரியை உத்தமபாளையம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும்போது லாரியின் ஓட்டுனர் ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் சாக்கினை தூக்கி சாலையில் எறிந்ததும் அதனை பொதுமக்கள் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி பாலமுருகன் கூறுகையில்,
அரிசி கடத்தல் சம்பந்தமாக ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் அரிசி கடத்தல் தங்கு தடையின்றி நடந்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!