தமிழகம்

மதுரை மாநகராட்சி பில் கலெக்டரை கடத்திய இருவர் கைது; போலீசார் விசாரணை

80views
மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் பகுதியில் வரி வசூல் செய்யும் மையத்தில் வேலை செய்து வரும் பி.பி.சாவடி திருமலை காலனி பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சரண்ராஜ் என்பவரை நேற்று மாலை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைத்து சிலர் காரில் கடத்தி சென்றதாக அவரது மனைவி வினிதா மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை பெற்று கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் சந்திரன் என்பவருக்கும், மதுரை மாநகராட்சியில் பில் கலெக்டராக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் சரண்ராஜ்யிடம் தனது மருத்துவமனைக்கு மாசுகட்டுப்பட்டு தடையில்லா சான்றிதழ் பெற்று தரவேண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு 1 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், அது தொடர்பாக எந்தவித சான்றிதழ் லும் பெற்று தராமலும், பணத்தை திருப்பி தராமலும் சரண்ராஜ் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் பணத்திற்காக மாநகராட்சியின் தற்காலிக பணியாளர் சரண்ராஜ்-யை மருத்துவர் கடத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்று உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவர் சந்திரனின் சொந்த மருத்துவமனையில் கடத்தி வைத்திருந்தாக கூறப்பட்ட சரண்ராஜ்-யை மீட்ட போலிசார் அரசு மருத்துவர் சந்திரன், மேலாளர் கண்ணதாசன், மருத்துவமனை ஊழியர் அருண்பாண்டியன் உள்ளிட்டோரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் அழைத்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சரண்ராஜ்-யை கடத்திய மருத்துவமனை மேலாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர் அருண்பாண்டியன் இருவரையும் கைது செய்த திடீர்நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!