தமிழகம்

கீழப்பாவூர் பகுதியில் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி

114views
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு நடத்தும் தென்னிந்திய அளவிலான 4ஆம் ஆண்டு ஆண்கள், பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி ஜன.27 துவங்கி 29 வரை 3 நாட்கள் கீழப்பாவூரில் நடைபெறுகிறது. இப்போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டுக்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.சுபா தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் விளையாட்டுக் குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் விளையாட்டு குழுவின் கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் விளையாட்டுக்குழு தலைவர் சு.மனோகரன், கௌரவ தலைவர் ச.செல்வன், தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் நல்லாசிரியர் அருள் இளங்கோவன், விளையாட்டுக்குழு துணைத் தலைவர் கே.பி.சுரேஷ், செயலாளர் ஜி.வைகுண்டராஜ், சட்ட ஆலோசகர் கே.ஆர்.பி.பிரபாகரன், பொருளாளர் பொ.அருணாசல முத்துச்சாமி, துணைச் செயலாளர் இசக்கிமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வி, கா.ராஜாமணி, ஆர். சுடலைபூபதி, எஸ்.பொருட்செல்வன், சு.கண்ணன், பூ.முருகன், டி.கே.கோட்டைச்சாமி, செயற்குழு உறுப்பினர் ஆர்.சுடலைமணி, பொதுக்குழு உறுப்பினர் எஸ். லெட்சுமிசேகர், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எஸ்.மதியழகன், மா.மாரியம்மாள், வை.முத்துலட்சுமி, எஸ்.முத்துலட்சுமி, எஸ்.கமலா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.1 லட்சம் ஆலங்குளம் செல்வராணி பட்டு மஹால் எஸ்.பிரின்ஸ் தங்கம் சார்பிலும், 2ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் கீழுப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் சீ.பொன்செல்வன், பேரூராட்சி துணைத்தலைவர் கி.ராஜசேகர் ஆகியோர் சார்பிலும், அரை இறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் கே.பரமசிவன், டி.சந்தோஷ், டி.விக்னேஷ் ஆகியோர் சார்பிலும் வழங்கப்படுகிறது. இதே போல் பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.75 ஆயிரம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் எஸ்.மதியழகன், எஸ். எம்.சதீஷ்குமார் ஆகியோர் சார்பிலும், 2ஆம் பரிசு ரூ.40 ஆயிரம் கே.கண்ணன், கே.சரவணன் ஆகியோர் சார்பிலும், அரை இறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் கே.வைரசாமி, என்.சங்கர் ஆகியோர் சார்பிலும் வழங்கப்படுகிறது. இப்போட்டிகள் ஜன.29 தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!