கட்டுரை

அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

64views
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பும் அதனை சுற்றி நடந்த சர்ச்சைகளும் ஆறு வருட காலம் கழித்து ஒரு தீர்வுக்கு வந்ததாக தெரிகிறது.
செப்டம்பர் 22 2016 உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் ( கிரீம்ஸ் சாலை) அனுமதிக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு எய்ம்ஸ் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் என பலரும் சிகிச்சை அளித்து வந்தனர். டிசம்பர் 5 2016 அன்று ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
இயற்கை மரணம் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் சொல்லப்பட்டாலும் ஜெயலலிதா அவர்களின் இறப்பில் பலவகையான சர்ச்சைகள் நிரம்பி வழிந்தது,இன்றளவும் உள்ளது.சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவர அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் , விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் உருவாக்கப் பட்டது இதில் ஆறு வருட விசாரணையும் 600 பக்க அறிக்கையாக தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் முரண்பாடான மருத்துவ சிகிச்சை மற்றும் நால்வர் தான் இதற்கு காரணம் என்று சசிகலா , ராதா கிருஷ்ணன், விஜயா பாஸ்கர், TTV தினகரன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மக்கள் கேள்விகள்:
ஜெயலலிதா அவர்கள் இறப்பின் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
1. அப்போலோ மருத்துவமனை குறிப்பின் படி அவர் இறந்தது டிசம்பர் 4 2016, ஆனால் விசாரணைக்குழுவின் அறிக்கை டிசம்பர் 4 2016.
2. ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட வார்டின் சிசிடிவி கேமிராக்கள் அனைக்கப் பட்டது ஏன்…?
3. மருத்துவ குழு அறிவுறுத்திய சிகிச்சை அளிக்கபட்டதா ? இல்லையா?
4. ஜெயலிதாவுக்கு ஆங்கியோ (angio) சிகிச்சை பெற அனுமதி மறுக்கபட்டதா…?
5. ஜெயலலிதா அவர்களை அப்போதைய முக்கிய அமைச்சர்கள் கூட பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது உண்மை தானா…?

தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் தகவல்களை முறைப் படி வெளியிடாத வரை சர்ச்சைகள் குறையபோவதில்லை..
வந்தந்திகள் என்று பலர் சொல்லுவது சில நேரத்தில் உண்மையாகிறது.
முடிச்சுக்கள் அவிழுமா….?…..?
கௌரி சங்கர் பாண்டியன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!