கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ் தீனியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்திற்கும் இடையிலானவன் முறைகள் எல்லைப்பகுதியில் தீவிர மடைந்துள்ளன.
மொத்தம் நான் குராக்கெட்டுகள் காசாபகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேலியராணுவம் (Israeli Defence Forces) கூறுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புபடைகள் (IDF) காசா பகுதியில் இருந்து Ashkelon நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இரண்டு ராக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கிறது.
நள்ளிரவுக்கு முன்னதாக மேலும் இரண்டு ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, ஆனால் அவைகாசா பகுதிகளில் (Gaza Strip) தரையிறங்கின. “காசாவில் உள்ள பயங்கரவாதிகள் இஸ்ரேலைநோக்கி 2 ராக்கெட்டுகளைவீசினர். காசாவிற்குள் ராக்கெட்டுகள் வெடித்தன, அதுபாலஸ்தீனிய பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்தன” என்று ஐடிஎஃப் (IDF) ட்வீட்செய்தது.
இரும்புடோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் (Iron Dome missile defence system) ஒருதாக்குதல் தடுக்கப்பட்டது. இரண்டாவது தாக்குதல் மக்கள் தொகை இல்லாத வெட்ட வெளிப்பகுதியில் தரையிறங்கியது. காயங்கள் மற்றும் சேதங்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.
முன்னதாக இஸ்ரேல் காசா பகுதியின் மீன் பிடி மண்டலத்தை மூடுவதாக அறிவித்திருந்தது. அதற்கு ஒரு மணி நேரத்திற்குப்பிறகு, நாள் முழுவதும் இன்சென்ட்ரி பலூன்கள் மூலம் வெடி பொருட்கள் அனுப்பபப்ட்டன.
இன்சென்ட்ரிபலூன் என்பது உள்ளே எரிபொருள் அல்லது சிறியவகை குண்டுகள் இருக்கும் பலூன்கள் ஆகும். இந்த பலூன்கள் வான்வெளியில் வெடிக்கும் போது, கீழே விழும் வெடி குண்டுகள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தும். இதனால் தெற்கு இஸ்ரேலில் டஜன்கணக்கான தீவிபத்துக்கள் நிகழ்ந்தன.
ஜெருசலேமில் ஏற்பட்டமோதல்களுக்கு இடையே மேலும் 14 பேர்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக பாலஸ் தீனிய Red Crescent தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் குறைந்தது 560 பேர்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஜெருசலேமில் மோதல்கள் தொடர்ந்து வருவதாகவும், ரமல்லாவிற்கு (Ramallah) அருகிலுள்ள மேற்குக்கரை சோதனைச்சாவடிகளில் பலர் கூடியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
மொத்தம் 70 பாலஸ் தீனியர்கள் ஷேக்ஜர்ராவிலிருந்து (Sheikh Jarrah) வெளியேற்றப்பட உள்ளனர். 1948 இல் இஸ்ரேல் நிறுவப்படுவதற்கு முன்னர் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் பாலஸ் தீனியர்கள் வாழ்கின்றனர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.