தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்க கம்புகள் ஊண்டும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

78views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தைத்திருநாள் ஜனவரி 15 பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெறுவதால் மாநகராட்சி சார்பில் 17 லட்சத்தி 61 ஆயிரம்  மதிப்பிடெண்டர் விடப்பட்டு ஆலங்குளத்தை சேர்ந்த கணேசன் என்பவர் வாடிவாசல் பகுதியில் உள்ள சாலை இருபுறங்களிலும் தடுப்பு வழிகள் அமைக்க கம்புகள் உண்டு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி விழா நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து நாட்களை உள்ள சூழ்நிலையில் தடுப்பு வேலைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!