தமிழகம்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது

65views
உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல்நாள் தை.பொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து, பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே, ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தகுதி பரிசோதனை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு காளை மாடுகளின் கண்கள் கருவிழி. கொம்புகள் இடைவெளி. உயரம் ஆகியவை பரிசோதனை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!