தமிழகம்

இந்திய நிர்ணய அமைவனம்: ஆட்சியர்

37views
இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில், இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில், இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்:
நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தரப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதலின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால், உற்பத்தியாளர்களின் தரமும் மேம்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தர நிர்ணயத்தை இணைத்துக் கொள்வதன் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
மேலும், தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு தரம் முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐஎஸ்ஐ.9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், மாநில நெடுஞ்சாலைகள் துறை, சுகாதாரத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, ஊறுஊ, தொழில்துறை, கூட்டுறவு சங்கம், மாவட்ட சுற்றுலா, சுய உதவிக்குழு, சட்டம் வல்லுநர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல், மதுரை கிளை அலுவலக தலைமை விருந்தினர் வி.ரமேஷ், விஞ்ஞானி-டி, பி.ஐ.எஸ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!