தமிழகம்

ராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

152views
ராமநாதபுரம் அருகே லாந்தை ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஆதிராவிடர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். விடுதி மாணவர்களுக்கு காலையில் வழங்கிய உணவை சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களிடம் அரசு அட்டவணை படி தினமும் வழங்கப்படும் உணவு வகைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். உணவுப் பொருள்களின் இருப்பு, தினமும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார். சுகாதார வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் பராமரிக்க வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாணவர்கள் தங்கி வரும் அறைகளுக்கு சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு தேவையான கட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது மாணவர்கள் விடுதி அருகே மைதானம் அமைத்து தர கேட்டுக் கொண்டனர். உடனடியாக மைதானம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். விடுதியில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெற வேண்டும். விளையாட்டில் ஆர்வம் காட்டுவதுடன் நன்றாக படித்து தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுரை வழங்கினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!