தமிழகம்

பசும்பொன்னில் டிஜிபி ஆய்வு போலீசாரிடம் குறை கேட்பு

46views
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி, 60 வது குருபூஜை விழா பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பசும்பொன் கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். கமுதி ரஹ்மானியா கார்டன் உயர்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள ஆண் போலீசார், சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள பெண் போலீசாரிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அங்கு போலீசாருக்கு சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு பரிசோதித்தார். தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனம், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!