தமிழகம்

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது

66views
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5ம் தொகுதி பயிற்சி புத்தகத்திற்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடைபெற்றது.
பயிற்சியைத் தொடங்கி வைத்து வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இத் திட்டம் ஒரு வரப்பிரசாதம். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவர்கள் மாலை நேரங்களில் இத் திட்டத்தின் கீழ் கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு நல் வழிகாட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது என்றார்.
பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர்.  பயிற்சியில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!