தமிழகம்

சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

147views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சோழவந்தான் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வருசை முகம்மது தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றி நோன்பினை திறந்து வைத்தார். மாவட்ட பொருளாளர் நூர் முகமது முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராமசுந்தரம் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சரவணன், சிறுபான்மை பிரிவு மீர் பாட்ஷா, மாலிக்,வட்டார தலைவர்கள் சுப்பராயலு, பழனிவேல், நகர் தலைவர்கள் சோழவந்தான் முத்துப்பாண்டி, வாடிப்பட்டி முருகானந்தம், ஓ பி சி மாவட்ட தலைவர் முருகன், அமைப்புசாரா ஓட்டுனர் மாவட்டத் தலைவர் சோனி முத்து செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி சிறுபான்மை துறை மாநில செயலாளர் பாதுஷா மற்றும் மேலூர் துரைப்பாண்டியன், மேல்நாச்சிகுளம் ராமசாமி, அபுதாஹீர் கணேசன், புரோஸ்கான், நாராயணன் ,மணி, முகமது இலியாஸ், சபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தோழமைக் கட்சியான திமுக சார்பில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அயூப் கான், மாவட்டத் துணைத் தலைவர் முருகன், இரும்பாடி ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!