பஞ்சாபின் மோகா அருகே நேற்று இரவு இந்திய விமானப்படை மிக் -21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது விமானம் வழக்கமான பயிற்சிப் பயணத்தில் இருந்தது என்று ஐ.ஏ.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படையின் மேற்குத் துறையில் ஐ.ஏ.எஃப் இன் பைசன் விமானம் (Bison aircraft of IAF in western sector) விபத்துக்குள்ளானது.
விபத்து நடைபெறுவதற்கு முன்னதாக, மிக் -21 விமானி (pilot) அபினவ் சவுத்ரி (Sqn Ldr Abhinav Choudhary), விமானத்தில் இருந்து வெளியே குதித்துவிட்டதாக ஐ.ஏ.எஃப் (IAF) வட்டாரங்கள் தெரிவித்தன.
படுகாயமடைந்த பைலட் அபினவ் சவுத்ரி உயிரிழந்தார். அவரது இழப்பில் வாடும் குடும்பத்தினருக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.