தமிழகம்

ராஜபாளையம் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய மகளிர் சுகாதார வளாகத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர் திறந்து வைத்தார்

56views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 2 வது வார்டு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்கு என கட்டப்பட்ட சுகாதார வளாகம் மோட்டார் பழுது காரணமாக பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.
புதிய சுகாதார வளாகம் கட்டித் தரக் கோரி பல முறை பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சுகாதார வளாகம் கோரி பல முறை பொது மக்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அரசு சார்பில் பொது மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப் பட்டு வந்தது.
இந்த நிலையில் அப் பகுதியை சேர்ந்த மன நல மருத்துவர் அர்ஜூனன் மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. சுகாதார வளாக கட்டடத்திற்கான செலவு ரூ. 13 லட்சத்தில் மருத்துவர் மற்றும் அவர்களது அமெரிக்க நண்பர்கள் சார்பில் ரூ. 6.5 லட்சமும், மீதமுள்ள ரூ. 6.5 லட்சம் பணம் அரசு மானியமாக வழங்கப்பட்டது.
தண்ணீர் தொட்டியுடன் கூடிய ஒரு குளியலறை, 11 கழிப்பறைகளுடன் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் புதிய சுகாதார வளாகத்தை கட்டுவதற்கு முயற்சி செய்த மருத்துவர் அர்ஜூனனை பொது மக்கள் மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இருவரும் இணைந்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். மேலும் ரூ. 50 ஆயிரம் மதிப்பில் மருத்துவர் சார்பில் அமைக்கப்பட்ட புதிய சின்டெக்ஸ் தொட்டியையும் வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!