தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே தெரு நாய்களிடமிருந்து காயம் பட்ட குரங்கை மீட்டு மருத்துவ உதவி செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

141views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியார் பாசன கால்வாய் பகுதிகளில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன இந்த குரங்குகளை அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் துரத்துவதும் நாய்களை குரங்குகள் துரத்துவதும் தினந்தோறும் வாடிக்கையாக நடந்து வரும் ஒன்றாகும்
இந்த நிலையில் நேற்று மாலை வைகை பெரியார் ஆற்றங்கரையோரம் சுற்றித்திரிந்த கர்ப்பிணி குரங்கு ஒன்றை இரண்டு தெரு நாய்கள் விரட்டிச் சென்றன அப்போது தெரு நாய்களிடம் இருந்து தப்பிச்சென்ற குரங்கை விடாமல் துரத்தி சென்ற தெரு நாய்கள் கடித்து குதறின இதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த அழகுமாரி என்ற 40 வயது பெண் தன்னைப் பற்றி கவலைப்படாமல் நாய்களிடமிருந்து குரங்கை காப்பாற்றி அருகில் உள்ள சின்னப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு வாவிட மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன் அழைத்துச் சென்றார் அங்கிருந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காயம் பட்ட குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்
பின்னர் குரங்கை அழகுமாரி பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் கொண்டு விட்டார் மனிதர்களுக்கு மனிதர்களே உதவி செய்யாத இந்த காலத்தில் தெரு நாய்களால் காயம்பட்ட குரங்கை மீட்டு சிகிச்சை அளித்த அழகு மாரியை அந்தப் பகுதி பொதுமக்கள் வெகுமாக பாராட்டினர்.  இந்த சம்பவம் அந்தப் பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!