தமிழகம்

வீட்டு வேலை செய்ய வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று கொத்தடிமையாக ‘அடைத்து வைத்து கொடுமை செய்தனர். மஸ்கட், ஏமனில் ஆயிரக்கணக்கானோர் ஆதரவின்றிஉள்ளனர். ஒமனிலிருந்து தாயகம் திரும்பிய பெண் பேட்டி

201views
மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாகலட்சுமி என்கிற பெண், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் குடும்ப வறுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு தெரிந்தவர்கள் மூலம் வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக மஸ்கட் சென்றுள்ளார். அங்கு அவரை துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும், உண்பதற்கும், உறங்குவதற்கும் கூட நேரம் தராமல் கொடுமைப் படுத்தியதாகவும்.
மேலும் தான் தாயகம் திரும்ப வேண்டும் என்று கூறியதற்கு அங்கிருந்த ஏஜென்ட் 3 லட்சம் தந்தால் தான் திருப்பி அனுப்பவும் என்று மிரட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து அவரை ஓமனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டு தூங்கவிடாமல் கொடுமைப்படுத்தி வேலை வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் உள்ள எம்எல்ஏ.ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் சசிகலா என்பவர் மூலம் நாகலட்சுமி தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். பின்னர் எம்எல்ஏவின் வழிகாட்டுதலின்படி நாகலட்சுமி மீட்கபட்டு இரு தினங்களுக்கு முன்பாக இந்தியா அழைத்து வரப்பட்டுளார்.
மேலும் தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு மாட்டியுள்ளதாகவும், உதவி கிடைக்காததால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், பலர் உணவு , உடை இன்றி தெருவில் திரிவதாகவும் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என்றும் நாகலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!