தமிழகம்

5000 தற்காலிக சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழ்நாடு சுகாதார மற்றும்.துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்க கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு பேட்டி

72views
தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நலச் சங்கத்தில் மதுரை மாவட்ட அமைப்பு கூட்டம் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை நடைபெற்றது இந்த கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் அன்பரசு
தற்போது பணி செய்து வரும்.5000 தற்காலிக.சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.  கொரோனா காலகட்டத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தவர்களை  தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி கிடைக்காத சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சியை கடந்த காலங்களில் தமிழக அரசே நடத்தி வந்த நிலையில் தற்போது தனியாரிடம் ஒப்படைத்ததுள்ளதை ரத்து செய்து மீண்டும் தமிழக அரசே நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்.5000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  1989 ஆம் ஆண்டு தமிழக மக்கள் தொகை 5 கோடியாக இருந்தபோது 12.000 சுகாதார பணியாளர்கள் இருந்தார்கள் ஆனால் தற்போது மக்கள் தொகை.சுமார் ஒன்பது கோடியாக உள்ள நிலையில் 50,000 மக்களுக்கு ஒரு சுகாதார ஆய்வாளரே உள்ளதால் பணிச்சுமை அதிகம் உள்ளது
ஆகையால் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் பயிற்சி முடித்த சுகாதார ஆய்வாளர்கள் அனைவரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டும்.  334 புதிய சுகாதார ஆய்வாளர் பணி இடங்களை நிரப்பும்போது சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
2400 மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார ஆய்வாளருக்கான பணியிடங்களுக்கான ஒப்புதல் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  2715 சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு நிரந்தர பணியிடங்களுக்கான கருத்துறிவிற்கு ஒப்புதல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதுள்ள சுகாதார ஆய்வாளர்களுக்கு ஊதிய உயர்வு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்  இது குறித்தும் துறை அமைச்சரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் நேரிலும் சந்தித்து பேசியுள்ளோம் முதலமைச்சரிடமும் மனு கொடுத்திருக்கிறோம் எங்கள் கோரிக்கையை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
இதில் தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர் நலச் சங்கத்தின் மாநில மாவட்ட பொறுப்பாளர்களாக மாவட்டத் தலைவர் பரகநாதன் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா மாவட்ட பொருளாளர் சுரேஷ் மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ் இணைச் செயலாளர் பொன்னுச்சாமி துணைச் செயலாளர் ராம் பிரகாஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன் பிரவின் காந்த் சுர்ஜித் செல்லப்பாண்டி அந்தந்த பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!