தமிழகம்

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

116views
ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது அஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு அதிகாலை கும்ப ஜெபம் கணபதி ஹோமம் ஆஞ்சநேயர் ஹோமம் அபிஷேகம் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. காலை வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மதியம் 3 மணியளவில் கும்ப ஜபம் அஷ்டவர்கள் ஆஞ்சநேயருக்கு 108 திவ்ய ஹோமம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டவரத ஆஞ்சநேயரே தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு மூன்று வேலையும் அன்னதானம் சிறப்பாக நடந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!