தமிழகம்

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தக்கோரி தவ்ஹீத் தீர்மானம்

50views
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட 23 வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.  மாநில செயலர் அன்சாரி முன்னிலை வகித்தார்.  ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்ட தலைவராக இப்ராஹிம் சாபிர், மாவட்ட செயலராக தினாஜ் கான், மாவட்ட பொருளாளராக
கரீம் ஹக் சாஹிப் , மாவட்ட துணைத்தலைவராக யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலர்களாக
உஸ்மான், ரஜப்தீன், சுல்தான், மீரான் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

2023 பிப்ரவரி 5ல் நடைபெறவுள்ள பித்அத் ஒழிப்பு மாநாடு குறித்து தீவிர பிரசாரம் செய்தல்,
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.  கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில்  முஸ்லிம் களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!