தமிழகம்

ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தமுமுக, மமக பொதுக்குழு கூட்டம்

127views
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தமுமுக மமக பொதுக்குழு கூட்டம் பரமக்குடி பாரதி நகர் தமுமுக தஃக்வா பள்ளிவாசலில் நடந்தது மாவட்ட தலைவர் எஸ்.ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார்.
தமுமுக மாவட்ட செயலாளர் கே.சிந்தா ஷேக் மதார், மமக மாவட்ட செயலாளர் ஏ.முகமது இலியாஸ், மாவட்ட பொருளாளர் எஸ்.செய்யது அப்தாஹிர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட உலமா அணி செயலர் மில்லத் இஸ்மாயில் கிராஅத் ஓதி விளக்க உரை நிகழ்த்தினார்.  ராமநாதபுரத்தில் டிச.6ல் நடைபெற உள்ள வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து, தமுமுக மாநில துணை பொதுச் செயலர் எஸ். சலிமுல்லாஹ் கான் உரையாற்றினார்.  பரமக்குடி, எமனேஸ்வரத்தில் உள்ள அணுகு சாலையின் இரு புறமும் விளக்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமுமுக மமக பரமக்குடி நகர் தலைவர் ஜெ.முகமது சஜித் நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!