தமிழகம்

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் மண்ணில்லாத விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்.         

59views
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், கூடமலை ஊராட்சி அலுவலகத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் மண்ணில்லாத விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். இம்முறையில் தாவர வளர்ச்சிக்கு தேவைப்படும் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவற்றை நீர்ன் மூலம் அளிக்கப்படுகிறது. உணவு உற்பத்திக்கு வானிலை மற்றும் மண் பலம் சாதகமாக இல்லாத இடங்களில் இம்முறை மிகவும் பயன்படுகிறது.
மேலும் நன்கு நிர்வாகிக்கப்பட்ட மண்ணில்லாத விவசாயத்தில பல பயிர்களை இரு மடங்கு வேகமாக உற்பத்தி செய்யலாம். இதில் புதினா தக்காளி மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம். செயல்முறை விளக்கத்தை இதில் உள்ள விவசாயிகள் மற்றும் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குணசேகரன், கூடமலை ஊராட்சி மன்ற தலைவர் யசோதா துரைசாமி, து.தலைவர் முத்துலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அனைவரும் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் செய்திருந்த மண்ணில்லா விவசாயத்தை பார்வையிட்டனர்.                கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி அலுவலகத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் மண்ணில்லா விவசாயம் குறித்து செயல்முறை விளக்கத்தை கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் பிடிஒ குணசேகரன் தொடங்கி வைத்தார். உலகில் ஊராட்சி மன்ற தலைவர் யசோதா துரைசாமி, துணைத் தலைவர் முத்துலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!