தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் மீது புகார்

80views
கெங்கவல்லி அருகே கூடியவை ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (48) இவர் தம்மம்பட்டிக்கு அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் நேற்று மாலை ஆத்தூரிலிருந்து அரசு பேருந்து ஓட்டிவந்த நிலையில் வந்த நிலையில் கூடமலை எம்ஜிஆர் நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிறுத்தாமல் பயணிகள் இறக்கி விடாமல் பஸ் சென்றதால் அதே பகுதியை சேர்ந்த குத்திலி என்ற வாலிபர் பஸ்சை நிறுத்தி வழிமறித்து கையில் இருந்த தேங்காய் பஸ் கண்ணாடி மீது அடித்துள்ளார் ஆனால் கண்ணாடி உடையவில்லை ஆனால் பஸ் டிரைவர் வரதராஜன் பஸ்சை நிறுத்தி விட்டு வாலிபரிடம் தட்டிக்கேட்ட போது அவரை தேங்காய் சிதறுகளை தாக்கியுள்ளார் இதில் வரதராஜன் கன்னத்தில் காயம் ஏற்பட்டு இதையடுத்து கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பிறகு வரதராஜன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர் .
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!