தமிழகம்

உலக அமைதி வேண்டியும் இந்திய பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் மதுரைக்கு பண்பாட்டு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள்

50views
உலக அமைதி வேண்டியும் இந்திய பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் பண்பாட்டு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் மதுரை வந்தபோது ரோட்டரி கிளப் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் செயலாளர்களின் ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாலு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ்பாபு அழகு சிங்காரம் செந்தில் மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இந்திய சாலைகள் வித்தியாசமாக இருப்பதால் பயணிப்பது சிரமமாகவுள்ளது, தமிழகத்தில் உள்ள கலை சிற்பங்கள் வியக்கவைக்கும் வகையில் உள்ளது என சுற்றுலா பயணிகள் பேட்டி.

உலக அமைதி வேண்டியும் தமிழகத்தின் கலாச்சார, பண்பாடுகள் குறித்தும் புராதான சின்னங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 14 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 41 ரோட்டரி உறுப்பினர்கள் கடந்த 13ஆம் தேதி முதல் வரும் 27ஆம் தேதிவரை பைக் மூலமாக பண்பாட்டு சுற்றுலா மேற்கொண்டுவருகின்றனர்.  இந்நிலையில் 6ஆவது நாளாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலை பார்வையிடுவதற்காக மதுரை சின்னசொக்கிகுளம் பகுதிக்கு வருகை தந்தபோது மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஹார்லி்டேவிட்சன் உள்ளிட்ட விலை உயர்ந்த பைக்குகளில் பேரணியாக வந்த வெளிநாட்டவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த பயணம் குறித்து பேசிய ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம் , தஞ்சை பெரிய கோவில் மற்றும் பல்வேறு கோவில்களுக்கு சென்று கட்டிட கலைகள் குறித்து புராதான சின்னங்கள் குறித்தும் அறிந்துகொண்டது சிறப்பாக இருந்தது. இந்திய உணவுகள் காரத்தன்மையுடன் இருக்கிறது. இந்திய சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக இருப்பதால் மேப்பில் சாலைகளை கண்டறிவது சிரமமானதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!