தமிழகம்

வேலூர் கிரீன் சர்க்கில் மேம்பால சுவற்றில் முதல்வர் படம். பிஜேபி எதிர்ப்பால் நெடுஞ்சாலைத்துறையினர் அழித்தனர்.

59views
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் உள்ளது. மத்திய அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தில் உள்ள சுவற்றில் அரசியல் கட்சிகள் இஷ்டம் விளம்பரம் மற்றும் பெரிய பேனர்களை ஒட்டின. இதனால் பார்ப்பதற்கு ஒருமாதிரியாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் வரலாற்று சம்பந்தமான படங்கள், கருத்து படங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்த வர்ணபூச்சை ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஓவிய கூடம் வரைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரீன் சர்க்கிள் பக்கவாட்டு சுவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் வரையப்பட்டது. இதற்கு வேலூர் பிஜேபி னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் படம் முழுமையாக பெயின்ட் பூசி மறைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை மேம்பாலத்தில் இயற்கை சூழல் மற்றும் பொதுவான படங்கள் மட்டும் வரைய அனுமதித்து இருந்தோம் ஆனால் மாநகராட்சியினர் இந்த குளறுபடி செய்து உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!