தமிழகம்

ரூபாய் 3 லட்சம் செலவில் தனியார் வங்கி பொதுமக்களுக்காக சோலார் மின்விளக்குகள் அமைப்பு.

276views
மதுரை மாவட்டம் திருநகர் அருகே 95 வது வார்டு பகுதியில் , அமைதிச் சோலை நகர், எஸ் ஆர் வி நகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் யோதிய மின்விளக்குகள் இல்லாததால், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தொடர்ந்து , அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டதன் பேரில் ,  பெடரல் வங்கி நிர்வாகம் தனது சொந்த செலவில் ரூபாய் 3 லட்சம் செலவில் அப்பகுதிகளில் ஐந்து சோலார் மின் விளக்குகளை பொதுமக்களுக்காக அர்ப்பணித்துள்ளனர் .  அதற்கான துவக்க விழாவில், மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!