மோடியும் மோசடி வங்கி கணக்கு திட்டத்தால் ஏழை மக்கள் பாதிப்படைவது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பாஜக வளர்ச்சி என்பது குண்டர்கள், ரவுடிகளிடம்தான் உள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி
206views
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்
மத்திய அரசு ஏழை எளியோருக்கு பணம் இல்லாத வங்கி கணக்கு தொடங்குவதாக கூறி ஏழரை கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கினர் அதற்கு அவர்கள் ஒரு பைசா கூட ஏழை எளியோருக்கு வங்கி மூலம் அந்த கணக்கை தொடங்க வைத்தனர். ஆனால் தற்போது ஏழை எளியோருக்கு வங்கிக் கணக்கின் மூலம் வரும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வரும் ஊதியம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அவர்களுக்கு வரும் உதவித்தொகையில் இருந்து செல்கிறது. குறைந்தபட்ச பணம் இல்லை எனக் கூறி எளியோரிடம் இருந்து வங்கிகள் பணத்தை பிடுங்கும் பணியை தற்போது செய்து வருகின்றனர். இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக உள்ளது இதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.






