தமிழகம்

100 % வாக்குப்பதிவு நம் கடமை : இயக்குனர், நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்

91views
வணக்கம்!
இந்த சட்டமன்றத் தேர்தலை ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போலவே பார்க்கிறேன் அதுவும் 3 காட்சிகள் மட்டுமல்ல, எல்லாக் காட்சிகளையும் நான் மட்டுமல்ல எல்லா மக்களும் houseful ஆக street full ஆக road full ஆகப் பார்க்கிறார்கள் அப்படி full ஆகப் பார்க்கும் மக்களை FOOL ஆகப் பார்க்கும் அல்லது Fool ஆக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள் இத்திரைப்படத்தை action, comedy, thriller, suspense, horror, fiction இப்படி எல்லாம் கலந்த genre-ல் அவியல் கூட்டணி entertainment ஆகத் தருகிறார்கள். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள் சுவாரஸ்யமாக ஆனால் கவலையுடன் பார்க்கிறோம்.
மொய் விருந்துப் போல பொய் விருந்து படைக்கப்படுகிறது , அதன் மீது மொய்க்கும் ஈக்களாக மக்கள் மெய்யாகவே ஈர்க்கப்படுகிறார்களா? அல்லது மக்களும் அரசியல்வாதிகளை ஏமாற்றப் பார்க்கிறார்களா? என்பதை பொறுத்திருந்தேப் பார்க்கவேண்டும்.
நாளைய நாட்டை ஆளப்போவது தலைவர்கள் அல்ல, இன்றைய இளைஞர்களே!!!!! எனவே ………மக்கள் வெற்றி பெற யாருக்கு ஓட்டளிப்பது? ஆனால், 100 % வாக்குப்பதிவு நம் கடமை.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!