தமிழகம்

காட்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அதிமுக, பிஜேபி, அமமுக, புரட்சி பாரதம் கூட்டணி நிர்வாகிகளுடன் சட்டமன்ற அதிமுக சார்பில் ராமு வேட்புமனு தாக்கல்

103views
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு நேற்று காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பாக அதிமுக வேட்பாளர் ராமு, காட்பாடி சுந்தரி அம்மன் கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக தாலுகா அலுவலகம் வந்தார்.பின் தேர்தல் நடத்தும் அலுவலர் மாறனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அருகில் பிஜேபி வேலூர் மாவட்ட தலைவர் தசரதன், பாமக மாவட்ட தலைவர் ஜெகன், அமமுக மாநில நிர்வாகி ராஜா, புரட்சி பாரதம் நிர்வாகிகள் இருந்தனர்.
ஊர்வலத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, பகுதி செயலாளர் நாராயணன், அதிமுக நிர்வாகி திருமால், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் ஆனந்தன், சோளிங்கர் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆனந்தன், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், காட்பாடி மத்திய ஒன்றிய விவசாய அணிசெயலாளர் மோகன்பாபு, மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரமேஷ், பிஜேபி மாவட்ட தலைவர் தசரதன், பாமக மாவட்ட செயலாளர் ஜெகன்,அமமுக சார்பில் காட்பாடி தேர்தல் பொறுப்பாளர் பிரம்மபுரம் சதீஷ்குமார், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் கொடுங்கந்தாங்கல் பாபு மற்றும் புரட்சி பாரதம் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் ஊர்வலத்தில் வந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!