தமிழகம்

காரியாபட்டியில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

42views
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் உப்பிலிக்குண்டு குருசாமி வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுதல், தமிழக அமைச்சராக பொறுபேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் , கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!