தமிழகம்

V-team குழுஅறக்கட்டளை மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய இராமநாதபுரம் மாவட்ட அளவிலான மகளிருக்கான எறிபந்து போட்டி

169views
கீர்த்திமிகு கீழக்கரையில் V-team குழுஅறக்கட்டளையும் மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய இராமநாதபுரம் மாவட்ட அளவிலான மகளிருக்கான எறிபந்து போட்டிகளை ,(16.01.23 மற்றும் 17.01.23) இரண்டு நாட்கள் நடத்தினார்கள்.

இறைவணக்கத்துடன் இனிதே துவங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா வரவேற்புரை வழங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் திரு. தினேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் தனியார் விளையாட்டு மன்றத்தின் மாணவிகள் உள்பட மொத்தம் 22 குழுவினர் பங்கேற்றனர்.
அதில் வெற்றி பெற்றவர்கள் :
1.முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம் கேடயம் மற்றும் கோப்பையை காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வென்றனர். Sponser-Sehnaz Abidha (Kilakarai Chairman,10000 Cash Prize)
2.இரண்டாம் பரிசு ரூபாய் 6,500 கேடயம் மற்றும் கோப்பையை கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும். Sponser -Fathima Nowra (V Team Trust Founder,Kilakarai,6500 Cash Prize)

3.மூன்றாவது பரிசு ரூபாய் 4,500 கேடயம் மற்றும் கோப்பையை, தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சங்கத்தின் Grippers குழுவினரும் வென்றனர்.

Sponsor

Ayisha Parween (AICE Custom Bridals,Kilakarai,4500 Cash Prize)

Jersey Dress Sponsors: Keegi, Kilakkarai & RideApp, Dubai

Tropies Sponsers:
Hameed Sultan
(Vice Chairman,Kilakarai)
Co Sponsers:
*Nights(Zaza Pizza Hut,Banners Sponser)
*Fathima Sulaiman(National Rural Women Development Trust)
*Rasiya Banu(V Boutique)
*Luthufia & Yousuf Sulaiha(Bismillah Group)
*Benazir(Al Yusr Foundation)
*Shibana Asmi,MUA(Hennazilasatain)
*Shithi Aaliya MUA(Aaliya Makeover)
*Joohi,Henna Artist(Design By Joohi)
*Fathima Sajitha(Freshly Baked)

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை V-Team குழுமம் நிறுவனர் Mmk.ஃபாத்திமா நௌரா அவர்களும் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் சீரும் சிறப்பாக நடத்தி முடித்தார்கள். ஏராளமான பெண்கள் குடும்பங்களோடு விளையாட்டு போட்டிகளை கண்டு களித்தனர்.

மற்றும் இவ் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர் பணிகளை Pearl Matriculation Higher Secondary பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நாகூர் கணி அவர்கள் சிறப்பாக செய்து முடித்தார் மற்றும் உறுதுணையாக இருந்த கீழக்கரை JVC Club கைப்பந்து பயிற்சியாளர் ஹமீது ராஜா மற்றும் V-team Trust Volunteers மற்றும் V-team Players.

இந்த விளையாட்டு போட்டிகளுக்கு நன்கொடைகள் தந்து ஆதரவு தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் V-Team குழு சார்பாக நன்றிகளையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதோடு இனி வரும் காலங்களில் கீழக்கரையில் பெண்களுக்கு தொடர்ந்து விளையாட்டு போட்டிகளை நடத்த எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று விழா அமைப்பளர்கள் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போட்டிக்கான விளம்பரம் மற்றும் ஒல ஒளிபரப்பு பணிகளை மதுரை விஜய் மீடியா நிறுவனத்தினர்்மேற்கொண்டனர்.
Organized By V-Team Trust Kilakarai, Co Organized By TBAK College kilakarai

Right Click & View Source is disabled.

error: Content is protected !!