தமிழகம்

தூத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய அரசியல் பிரதிநிதித்துவ மாநாடு – தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தகவல்

34views
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அரசியல் ஆதரவு, பிரதிநிதித்துவ மாநாடு துாத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ளது என தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் அரசியல் ஆதரவின்றி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை மீட்டு எடுக்க வரும் தேர்தல்களில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். எங்கள் மக்களின் குரல் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இக்கருத்தை தெளிவுப்படுத்தும் விதமாக அரசியல் ஆதரவு, பிரதிநிதித்துவம் வழங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மாநாடு துாத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க ஆளும் கட்சி அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். தேவேந்திர குல வேளாளர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும், 1934ல் தேவேந்திர குல வேளாளர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இருந்துள்ளனர். தற்போது ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ளோம். இதை பழையபடி மாற்றம் செய்து மீண்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த உள்ளோம். கடந்த காலங்களில் பாஜக, அதிமுக கூட்டணியில் பயணித்தோம். அவர்களால் எங்கள் சமுதாயத்திற்கு எவ்வித பயனும் இல்லை. தற்போது திமுகவின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதால் வெற்றி பாதையில் திமுக செல்வதால் நாங்கள் திமுகவுடன் பயணிக்கலாம் என்று உள்ளோம். ஆளும் கட்சியான திமுகவை நோக்கி எங்கள் அரசியல் பயணம் இருக்கும். யார் வந்தாலும் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை ஏற்கும் கட்சியின் பின்னால் தான் நாங்கள் செல்வோம். நாங்கள் நடத்தும் மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!