தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

98views
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (09.12.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதேபோல், இன்று (09.12.2022) நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் டிச.12ல் நடைபெறும் என ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!