தமிழகம்

விமான நிலையத்தில், வாடிக்கையாளர் சேவை: பயிற்சி

163views
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வெறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ,பி.டி.சி ஏவியேஷன் அக்டாமி நிறுவனம் மூலமாக, விமானநிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை, பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும் கல்வித் தகுதியில், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20000த்தை தாட்கோ வழங்கும். இப்யிற்சியினை, வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியனை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் மற்றும் புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய நூறு சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!