தமிழகம்

சோழவந்தான்.தொகுதி.சமயநல்லூரில்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம்

156views
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் சமயநல்லூரில் நடைபெற்றது. இந்த பேரவை கூட்டத்திற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் மத்திய மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் மாவட்டக் குழு முடிவுகளை பேசினார்.

இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, த.செல்லக்கண்ணு, வி.பி.முருகன், வி.உமாமகேஸ்வரன் பி.ஜீவானந்தம், செ.முத்துராணி, , மாவட்ட குழு உறுப்பினர்கள் இடைகமிட்டிச் செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டததின் நிறைவாக புறநகர் மாவட்டததில் தீக்கதிர் நாளிதழ்களுக்கான 140ஆண்டு சந்தா, 26 அரையாண்டு சந்தா என மொத்தம் 166 சந்தாவிற்கான தொகை ரூபாய் 3லட்சத்து 7ஆயிரத்து முன்னூறு ரூபாய் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் அவர்களிடம் வழங்கபட்டது .
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!