தமிழகம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் வழங்கிய அதிநவீன குப்பை எடுக்கும் எந்திரம் – உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு செயல்படும் ஆச்சர்யம்

188views
மதுரை மாநகராட்சி நூறு வார்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது இதில் தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் என தனித்தனியாக தூய்மை பணியினை மேற்கொண்டு வருகின்றனர் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனமானது குப்பைகளை அள்ளுவதற்கு போதிய உபகரணங்கள் வழங்கவில்லை.
மேலும் இவர்கள் வெறும் கைகளாலேயே கை உறை இல்லாமல் அள்ளுவதும் மலம் உள்ளிட்ட குப்பைகளை எடுக்கும் சாதாரண உபகரணம் கூட இல்லாமல் வெறும் கைகளிலும் மற்றும் மரக்குச்சிகளிலும் குப்பைகளை எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் வெறும் கைகளால் அள்ளும் பொழுது அவர்கள் நகம் மூலமாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனத்திடம் இதுகுறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தூய்மை பணியாளர்களை நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை அள்ளுவதற்கு உரிய உபகரணங்கள் வழங்கி கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பெட்டகங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவர்கள் பயன்படுத்திய குச்சியை வைத்து குப்பை எடுத்ததை உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒப்பந்ததாரர்களும் செயல்பட்டு வருவதை வேதனையுடன் அப்பகுதி மக்கள் பார்த்து  செல்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!