தமிழகம்

ராமநாதபுரத்தில் 69வது கூட்டுறவு வார விழா  1,531 பேருக்கு ரூ.11.58 கோடி நலத்திட்ட உதவி

98views
69வது கூட்டுறவு வார விழா கூட்டுறவுத்துறை சார்பில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். இதில் 1,531 பயனாளிகளுக்கு ரூ.11.58 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு தொடர்பான பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள், கூட்டுறவு துறை ஊழியர்கள், மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடை ஊழியர்களுக்கு பரிசு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.
அமைச்சர் பேசியதாவது:
நடப்பாண்டில் 26,245 பேருக்கு ரூ.107.84 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அக். 2022 வரை 29 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு ரூ.151.73 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. அக். 2022 வரை 83,488 விவசாயிகளிடம் இருந்து ரூ.83.79 கோடி பயிர் காப்பீட்டிற்கான பிரீமிய தொகை பெறப்பட்டுள்ளது. 2022 அக். வரை 781 உதவிக்குழுக்களுக்கு 20.79 கோடி சுழல் நிதி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பார்த்திபனூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 2 கூட்டுறவு மருந்தகம் துவங்கப்பட்டு 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மக்களுக்கு மருந்து விற்கப்பட்டு வருகிறது. 47 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 52 புதிய பொது சேவை மையங்கள் துவங்கி செயல்பாட்டில் உள்ளன.
இவ்வாறு பேசினார்.
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் உ. திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ். நாராயண சர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் க.முத்து குமார், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மேலாண் இயக்குநர் க. மனோகரன், சரக துணை பதிவாளர் சுப்பையா, துணை பதிவாளர் புஷ்பலதா, சார் பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!