தமிழகம்

ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் குவைத் அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி

68views
சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக மிகவும் சிறப்பாக தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கத்தில் நடைபெற்றது.  சட்டசபை பேரவை தலைவர், சபாநாயகர் மு. அப்பாவு MLA கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அரங்கம் முழுதுவதும் நிறைந்து இருந்த மக்களின் முன்னால் அவர் கல்லூரியையும், நிகழ்ச்சியை நடத்திய முன்னாள் மாணவர்களையும் மற்றும் 1950 மற்றும் 60 களில் எப்படி தமிழ்நாடு முழுவதும் கல்வி அனைத்து கிராமங்களுக்கும் பரவியது எனவும் பேசியது மட்டுமல்லாமல் தமிழக அரசின் சேவைகளை வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு கழக அரசாங்கம் செய்யும் பணிகளை குறிப்பாக வெளிநாடு வாழும் தமிழர்களுக்கான அமைச்சகம் அமைத்தது, பணியில் பாதிக்கப்பட்டு திரும்பியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது என பல சேவைகளை கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் எடுத்துரைத்தார்.  சபாநாயகர் உடன் அவரது துணைவியார் விஜயா அம்மாவும் கலந்துகொண்டார்.
இதனிடையே இவ்விழாவில் டி.வி.எஸ். குரூப் சேர்மன் எஸ். எம். ஹைதர் அலி, ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் அமீர் அகமது, சுப்ரீம் குரூப் சேர்மன் ஒருங்கிணைப்பாளர் முகமத் ஆலிம் அல் புகாரி, இப்ராஹிம், ஏ. சித்திக், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க குவைத் பிரிவின் சங்க நிர்வாகிகள் பிரதிநிதிகள் டாக்டர் முனீர் அகமது, ஜமாலுதீன், ரமேஷ், இதயத்துல்லா, மற்றும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் முன்னாள் தலைவரும் பிரபல சமூக ஆர்வலருமான அலிபாய் எனும் முகமது அலி மற்றும் நிகழ்ச்சியில் அயலக கழக நிர்வாகிகளும், அனைத்து தமிழ் அமைப்புகளும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் என 800 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குவைத் பிரிவின் அமைப்பினர் சிறப்பாக வடிவமைத்து இருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!