தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பிரவீன்ராஜ் தலைமையில் பட்டங்களை வழங்கிய இஸ்ரோ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

26views
வேலூர் தொரப்பாடியில் உள்ள வேலுர் அரசு பொறியியல் கல்லூரின் 34 மற்றும்35வது ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிரவீன்ராஜ் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர்/முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் கலைவாசன் வரவேற்றார். முதன்மை சிறப்பு விருந்தினராக பெங்களூரு இஸ்ரோ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சுமார் 779 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக எச்.சி.எப்.நிறுவன துணைத்தலைவர் திலிப்குமார் தேவநாதன் பேசினார்.  பட்டமளிப்பு விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள், துறைசார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள். இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!