தமிழகம்

செய்யூர், அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா – 2026

837views
செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி முதல்வர் முனைவர் சு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் போந்தூர் கனகசுந்தரம் , திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் Rajamithran S S , ஆலந்தூர், அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ.சங்கரநாராயணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சு.மாதவன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் மு.பிரசாந்த் வரவேற்புரையாற்றினார். கணினித் துறைத் தலைவர் முனைவர் தி.கோ.பாபு நன்றி கூறினார்.  கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்துச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.

நிகழ்ச்சிகளை முனைவர் பட்ட ஆய்வாளர்கள் செல்வி பா.கிருத்திகா , செல்வன் மு.தினேஷ்குமார், இளங்கலை மாணவர்கள் செல்வி ஏ.பிரியதர்ஷினி, செல்வி க.இகாந்திகா, செல்வி கோ.ஜீவிதா, செல்வன் ஜெ.ஜீவா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!