தமிழகம்

கல்லூரி நாள் & விளையாட்டு விழா – 2026

136views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், கல்லூரி நாள் மற்றும் விளையாட்டு விழா 02.04.2026 அன்று நடைபெற்றது. இளங்கலை மூன்றாமாண்டு இயற்பியல் மாணவர் அஜித் கண்ணன் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் கல்லூரி ஆண்டறிக்கைகளை சமர்ப்பித்தனர். எமனேஸ்வரம், சட்டக்களம் பத்திரிக்கை, நிறுவனர், முஹம்மது அலி ஜின்னா, வழக்கறிஞர் ஜான் சேவியர், கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்லூரி ஆட்சிக்குழு, உறுப்பினர் ஹமீத் தாவூத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினரை கல்லூரி ஆங்கிலத்துறை தலைவி அனிசா பர்வீன் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, முதல்வர் சுமையா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பல்கலைக்கழக ரேங்க் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக முதுகலை தமிழ், இரண்டாமாண்டு மாணவி சர்மிளா நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், அப்துல் சலீம் மற்றும் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர், சபினுல்லாகான் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!